தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி என மூன்று அடுக்காக ஊராட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஊரக வளர்ச்சி துறை இயக்குனரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மாதத்தில் ஒரு அமர்வுக்கு பத்து மடங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. […]
