சிவகங்கை கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சிவகங்கை மாவட்ட கழுகோர்கடை கிராமிய தப்பாட்டக் குழு சங்கத்தின் சார்பில் தப்பாட்ட கலைஞர்கள் 20 பேர் தப்பாட்டம் இசைத்து, ஆட்டம் ஆடி வந்தனர். அதன்பின் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து கொடுத்தனர். அந்த […]
