தேசிய பஞ்சாயத்து ராஜ்தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று பஞ்சாயத்துகளில்சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு உள்ளாட்சித்துறையானது அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் தமிழகம் முழுதும் இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு எனும் கிராமத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். அந்த கூட்டத்தில் பொது […]
