உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதனால் அயோத்தி நகரில் தீப விளக்குகளை ஏற்றுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. […]
