Categories
உலக செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நாடு… என்ன காரணம்…?

ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கும் புர்கினோ பாசோ, மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு, இது பற்றி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை கலைத்துவிட்டு, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியிருப்பதால் தங்களின் கூட்டமைப்பிலிருந்து புர்கினா பாசோ தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய காரணத்தால், மாலி நாட்டையும், கடந்த வருடத்தில் கினியா நாட்டையும் விலக்கி வைத்திருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

‘மக்கள் வழிநடத்துவார்கள்’…. கலைக்கப்பட்ட அதிபர் ஆட்சிமுறை…. கண்டனம் தெரிவித்த அண்டோனியோ குட்டாரெஸ்….!!

அதிபர் ஆட்சிமுறை கலைக்கப்பட்டதற்கு ஐ.நா.வின் பொதுசெயலாளரான அண்டனியோ குட்டரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா நாடான கினியாவானது 1958 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து பிரிந்து விடுதலை அடைந்தது. இதனையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜனநாயக முறைப்படி முதல் பொதுத் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானார். இதனை தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். ஆனால் அவரின் ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. […]

Categories
உலக செய்திகள்

கினியாவில் துப்பாக்கிசூடு சத்தம்.. குவிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. வெளியான வீடியோ..!!

ஆப்பிரிக்காவின் கிழக்கு நாடான கினியாவின் தலைநகரான கோனக்ரியில் துப்பாக்கி சுடும் சத்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோனாக்ரியில், இன்று ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பயங்கரமாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. அதே நேரத்தில், தலைநகரில் இருக்கும் வீதிகளில் கவச வாகனங்களிலும்,  லாரிகளிலும் ராணுவ வீரர்கள் சோதனைக்கு சென்றிருக்கிறார்கள். https://twitter.com/PSFAERO/status/1434470329418665993 அதிகமான அமைச்சர்களும், ஜனாதிபதி மாளிகையும் இருக்கும் கலூம் சுற்றுப்புறத்தோடு  பெரிய நிலப்பகுதியை சேர்க்கும் பாலம் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு ஜனாதிபதி மாளிகைக்கு சுற்றி நிற்க வைக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ […]

Categories
உலக செய்திகள்

மார்பர்க் வைரஸ் கண்டுபிடிப்பு…. வௌவால்களிடம் இருந்து பரவல்…. தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

கினியாவில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வகை வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கினியாவில் புதிதாக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸான மார்பர்க் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடியதாகும். அதுவும் குறிப்பாக வௌவால்களில் இருந்து பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 88 சதவீத இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

உலகிற்கு அடுத்த எச்சரிக்கை .. கொரோனாவை விட ஆபத்து…. உயிரை பறிக்கும் எபோலா பிடியில் பிரபல நாடு ..!!

கொரோனா தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதைவிட ஆபத்தான எபோலா என்ற  நோய் தொற்று பரவிக் கொண்டு இருப்பதாக பிரபல நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. கினியா நாட்டில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எபோலா தொற்று  நோய் பரவுவதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எபோலா நோய் கடந்த 2013- 2016 க்கு இடையில் கினியா மற்றும் அண்டை நாடுகளான சியரி லியோன், லைபீரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது இந்த நோயால் ஏறக்குறைய 11,323 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |