கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று மாலையில் அங்குள்ள வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார் . அப்போது ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ஆட்டை காப்பாற்ற முடிவு செய்தார் .பின்பு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் .ஆனால் […]
