கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாயக் கிணற்றின் அருகே ஒரு சிறிய வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது. […]
