கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள மாதாங்கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐஸ் வியாபாரம் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் பகுதியில் ஒரு கிணற்றில் […]
