புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். […]
