80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியில் பாவாயி(85) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்துள்ளார். மேலும் அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியால் நீந்தி மேலே ஏறி வர முடியவில்லை. இதனையடுத்து மூதாட்டியின் […]
