கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த மயில் குஞ்சுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனதுறையினிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள கந்தம்பட்டி கிராமத்தில் கோகில வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த கிணற்றிலிருந்து மயில் குஞ்சுகளின் சத்தம் வந்துள்ளது. இதனை அடுத்து கோகிலவாணன் அங்கு சென்று பார்த்த போது மயில் குஞ்சுகள் கிணற்றில் உள்ள பாறையில் இருந்து பரிதாபமாக சத்தமிட்டுள்ளது. இதனை […]
