தண்ணீர் குடிக்க வந்த கடமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் பத்திரமாக புதைத்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட டாணா வனப்பகுதியில் யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலையடிவாரத்தில் உள்ள விவசாய கிணற்றில் கடமான் ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கண்டமனூர் வனத்துறையினர் கிணற்றில் விழுந்த கடமானை மீட்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்களின் […]
