கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 7 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் குமார் தனது நண்பனான சஞ்சய் உடன் வச்சக்காரப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
