ஆடுமேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் அருணாச்சலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருணாசலம் தான் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். இதனையடுத்து வெகுநேரமாகியும் முதியவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருணாசலத்தின் […]
