திருப்புவனம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவி பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழராங்கியம் கிராமத்தில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்தார். திவ்யா முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துள்ளார். அதன் […]
