கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருப்பசாமி நகரில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்காக ஜோதி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அடுத்து ஜோதி எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
