மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிக்காடு கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் தங்களுக்கு சொந்தமான கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி ஸ்ரீகாந்த் […]
