குன்றி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிதண்ணீருக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், டி. என் பாளையம் அடுத்துள்ள கடம்பூர் அருகில் குன்றி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கோம்பைத்தொட்டி, மாகாளிதொட்டி, கோவிலூர், நாயகன் தொட்டி, அணில்நத்தம், கோம்பையூர், ஆனந்த்நகர், கிளை மன்ஸ்தொட்டி குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர் உட்பட 10-க்கும் அதிகமான ஊர்கள் இருக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு கிணற்று தொட்டி, […]
