கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தையுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பதும் அவருடைய மகள் சாதனா ஸ்ரீ என்பதும் தெரியவந்துள்ளது. இதில் கல்பனாவுக்கும் வி.சி மோட்டூர் பகுதியை […]
