கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ரகுராம் கடந்த ஆகஸ்ட் மாதம் நர்மதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகுராமிற்கு மது குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரகுராமிற்கும் நர்மதாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ரகுராம் மீண்டும் தகராறு செய்துள்ளார். […]
