கிணற்றில் குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள பெரிய சோளிபாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்தொற்று குணமடைந்த பின்பும் செல்லத்துரை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் அருகே […]
