நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் கரடி தவறி விழுந்த நிலையில், அதனை மீட்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரிடேம் அருகில் வீரனூரை சேர்ந்தவர் 35 வயதான சண்முகம். நேற்று முன்தினம் இரவு காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த இரண்டு வயதுள்ள கரடி ஒன்று சண்முகத்திற்கு சொந்தமான 50 அடி ஆழம் உள்ள விவசாய […]
