இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டைகள் மூலமாக 3 லட்ச ரூபாய் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு வங்கிகளில் செலுத்தி விடும். […]
