காவிரி மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் […]
