நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவையாற்றில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவேரி டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாகவே மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]
