காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து […]
