ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ காவி துண்டு மற்றும் தலையில் தொப்பியை அணிவித்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். […]
