காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யும்படி பொதுமக்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கோரையாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு காவிரி குடிநீர் மட்டும் விநியோகம் செய்யும்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் […]
