பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது […]
