சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள ராம்நகர் ஆறாவது வீதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் வேலைக்கு சென்றுவிட்டார். கண்மணி அமராவதிபுதூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு […]
