Categories
அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் பதவியில் நீட்டிக்க மாட்டார்கள்… அதிமுக முன்னாள் அமைச்சர் திட்டவட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டம் அதிமுக சார்பில் சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51 ஆம் வருட துவக்க பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அதிமுகவில் இருந்து சென்ற ராஜகண்ணப்பன் தொடர்ந்து கப்பம் கட்டி வருவதனால் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற வழக்கு நீடித்து வருவதனால் அவர் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

8  மாதங்களில் 195 காவல்துறையினர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் 5- வது பெரிய காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது. ஆனால் நமது தமிழக காவல்துறையினருக்கு பணி சுமை, மன அழுத்தம், உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். மேலும் இது குறித்து புகார்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினரின்  உடலை பேணும் வகையில் மருத்துவ திட்டங்கள், மனதை  பேணும் வகையில் யோகா, தியானம் போன்ற சிறப்பு வகுப்புகள் நமது தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினர் இனி செல்போன் பயன்படுத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!

பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்கள் பயன்படுத்துவதை  ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், எனவும் ஏதேனும் அவசர காரணம் எனில் முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறை பணிக்கு தேர்வானோர்…. உடற்தகுதிதேர்வு பற்றி வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக் ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! காதலனை கரம் பிடிக்க காதலி செய்த நரி தந்திரம்….!!!!

மும்பை மராட்டிய மாநிலத்தில் நாக்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் என்னை அடையாளம் தெரியாத 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த, நாக்பூர் நகர காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கல்மாணா நிலையத்தை வந்தடைந்தனர். அந்த பெண் அளித்துள்ள புகார் மனுவில்,நான் நடன வகுப்பிற்கு செல்லும் போது ஒரு வேனில் 2 மர்ம நபர்கள் என் அருகே வந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு சின்னங்கள் இனி…. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம் பி அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவததாகவும் அதைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த சட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 17 பெண்கள் பாதாள அறையில்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பாரில் பாதாளஅறையில் மறைத்து வைத்திருந்த 17 பெண்களை மீட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அங்கு சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையினர் முதலில் சோதனையிட்டபோது நடனமாடும் பெண்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இருந்தாலும் கூட தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், மறுநாள் காலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஓசியில் போடு…. இல்லாட்டி கொளுத்திடுவோம்…. புள்ளிங்கோவின் அட்டகாசம்….!!!!

புதுவையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் போட்டவுடன் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் பணம் கொடுக்க முடியாது. ஓசியில் தான் போடவேண்டும். எங்களிடம் பணம் கேட்டால் பெட்ரோல் பங்கை கொளுத்திவிடுவோம் என்று மிரட்டி, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுபற்றி பெட்ரோல் பங்க் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் தேர்வு…. மெரினாவில் மாணவர்கள் போராட்டம்…. கடும் எச்சரிக்கை….!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை மாணவப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்ட நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் சூழ்ந்த ஆஞ்சநேயர் கோவில் …. இரு காவலர்கள் மீட்பு…. காவல்துறை எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கோயிலுக்குள் இருந்த மகாலிங்கம் மற்றும் திருமலைச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் துறையில் 13406 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் போலீஸ் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.எஸ்.பி. அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.ஏ.எஸ். முதல் கான்ஸ்டபிள் வரை உள்ளவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கு உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஸ்டேஷன், ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் படை ஆகிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 14 டி.ஜே.பி. கள் மற்றும் 17 ஏ.டி.ஜி.பி.கள் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இது குறித்து யார் மீதாவது உங்களுக்கு சந்தேகமா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அதிரடி அறிவிப்பு….!!!

சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதன்படி தற்போது வழிப்பறி, திருட்டு சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் காவலன் ஆப் அல்லது 112 மற்றும் 110 ஆகிய அவசர எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுதும் போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அட…. இவர்தாங்க அமைச்சர் செல்லூர் ராஜூ…. பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர்….!!!!

சென்னை மாதவரம் பால்பண்ணை குடியிருப்பில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவரை  சத்ய நாராயணன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து காயத்ரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சத்யநாராயணன் என்பவர் தன்னை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரின் தம்பி என்று கூறியுள்ளார் . அதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் மூலமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி காயத்ரிடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவன்… திடீரென நடந்த துயர சம்பவம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மீன்பிடிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் சதீஷ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தன் நண்பர்களான ஜீவா, சதீஷ்குமார், அஜய்குமார் ஆகியோருடன் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த சதீஷ் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைதொடர்ந்து சதீஷ் நண்பர்கள் ஊர் மக்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த 50 பவுன்… டிரைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு… குவியும் பாராட்டுக்கள்…!

ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வியாபாரிகளுக்கு இலவச முகக்கசவம் வழங்கிய போலீசார் – பேனர் வைத்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்….!!

முகக் கவசம் அணியாமல் மீன் வியாபாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டிகந்தன்பாளையத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரும்பாலானோர் முக கவசம் அணிவது இல்லை. எனக் கூறப்படுகிறது போலீசார் பல முறை அறிவுறுத்தியும் வியாபாரிகள் முக கவசம் அணியாமல் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து முககவசம் அணிவதற்கான அவசியம் குறித்து அப்பகுதியில் பேனர் வைத்த போலீசார் வியாபாரிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர். அதன்பின் காவல் துறையினர் பேசுகையில் “மற்றவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

காவல் துறையினரை கண்டியுங்கள்…மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

தலைமை செயலாளர் காவல் துறையினரை கண்டிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் கூட்டாக, தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை தடுப்பதற்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு தண்ணீர் விநியோகம் இல்லை என்றால் சுகாதாரம் என்ற பேச்சுக்கே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு – நெல்லையில் குழந்தைகளிடையே ஓவிய போட்டி..காவல் துறை..!!

நெல்லையில் குழந்தைகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணகுடி காவல் ஆய்வாளர் சாகுள் ஹமீத் ஓவிய போட்டி நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை சேகரித்த காவலர்கள் ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர். இதில் […]

Categories

Tech |