காவல்துறை அதிகாரி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் மணிமாறன். இவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சாலையோரம் வசிக்கும் 150 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அவர்கள் பசியாற உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக துணை காவல் கண்காணிப்பாளரின் செயல் அமைந்தது என பொதுமக்கள் பலரும் மணிமாறனை பாராட்டி […]
