Categories
மாநில செய்திகள்

கத்திக் குத்துப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை…. நேரில் சென்று நலம் விசாரித்த டி.ஜி.பி…..!!!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று  காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த காவல் உதவி […]

Categories
மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு…. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு….!!!

தமிழ்நாடு உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் நேற்று காலை முதலே இணையத் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கோளாறு ஏற்பட்டது. இதனால் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

போலீசுக்கே பாதுகாப்பில்லை…! விடியா அரசின் அவலம்… எடப்பாடி கடும் தாக்கு …!!

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு மூலம் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமாகிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சமூக விரோதிகளால் திருச்சி நவல்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு…!!

சேலத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.  சேலம் சூரமங்கலத்தில் உள்ள போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் நேற்று சூரமங்கலத்தில் உள்ள ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர், சாலையில் நின்று செல்போனில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை என தகவல் -எஸ்.ஐ. மரணத்தில் சதி என கதறும் மனைவி”

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மரணத்தில் சதி உள்ளதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை  அடுத்த கோட்டையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சேகர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று உடலை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா!

கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆதரவற்றோருக்கு உதவிய காவலர் – குவியும் பாராட்டு

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்து உடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில்  ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேருக்கு முடி திருத்தம் செய்ய முயன்ற அவருக்கு, அந்த […]

Categories

Tech |