தளபதி விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவற்றில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இப்படத்துக்கு பின் விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். முன்பே மாஸ்டர் திரைப்படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து அண்மையில் வெளியாகிய விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால், விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. […]
