காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்காக காவல்துறை சார்பில் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி மருந்து வைத்து வருபவர்களின் கைகளில் தெளித்து உள்ளே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்களே முககவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை தயாரித்து பணியிலிருக்கும் […]
