சிவகங்கையில் வீட்டில் புகுந்த பாம்பை காவல்துறை துணை ஆய்வாளர் பத்திரமாக மீட்டு மலைபகுதியில் கொண்டு விட்டு வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்பரசன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனை தற்செயலாக கண்ட அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அன்பரசன் அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அது நல்ல பாம்பு என்று தெரியவந்தது. […]
