காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அருகே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நீலப் பூங்காவில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் அந்த பெண் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், பூங்காவில் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் வீட்டிற்கு செல்லலாம் […]
