Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் அப்பா சாவுக்கு போலீஸ் தான் காரணம் – மதுரையில் பரபரப்பு புகார் ….!!

மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் டார்ச்சரால் தந்தை தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மதுரை அவனியாபுரம் பத்மா தியேட்டர் எதிரில் உள்ள மூன்று மாடி காலனியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். ஆட்டோ ஓட்டுனரான இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துராமலிங்கம் இளையமகன் மாரிச்செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை கொடுத்தார். புகாரில், வீட்டில் தனியாக இருந்த தந்தையை  […]

Categories
உலக செய்திகள்

எச்சரித்தும் பயனில்லை… “கொரோனா விதிமுறையை மீறி நடத்தப்பட்ட விருந்து”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் 800 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனை கட்டுப்படுத்த பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக ஒன்றுகூட கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது . இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் West end- ன் Green Street என்ற பகுதியில்  இருக்கும் ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரூ.50,000க்கு மேல கொண்டு போகாதீங்க…! மீறினால் நடவடிக்கை பாயும்…. நாகையில் தீவிர சோதனை …!!

நாகப்பட்டினம் அருகே தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளுடன் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோதனைச் சாவடியில் இரவு நேரங்களில் அதிக அளவில் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்… கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி… போலீசார் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

கனடாவில் 28 வயது இளம்பெண் காணாமல் போன வழக்கில் அந்த பெண் பற்றிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவில் 28 வயது நிரம்பிய தைஷா லேம்ப் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு காணாமல் போனதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தைஷா காணாமல் போவதற்கு முன்பாக  பிப்ரவரி 23ஆம் தேதி கடைசியாக குடும்பத்தினருக்கு செல்போனில்  மெசேஜ் அனுப்பினார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . தைஷாவின் உயரம் 5 அடி […]

Categories
உலக செய்திகள்

தம்பதியின் வீட்டிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை… என்ன நடந்திருக்கும்…? குழப்பத்தில் காவல்துறையினர்…!!

கனடாவில் வீட்டிற்குள் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.  கனடாவில்  ஹால்மில்ட்டன் என்ற நகரில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகப்படும்  வகையில் ஏதேதோ மர்மமான விஷயங்கள் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் அந்நகரில் செய்தி ஒன்று பரவியது. பின்னர் அந்த செய்தி புரளிதான் என்று மற்றொரு செய்தியும் பரவிக்கொண்டிருந்தது.இந்நிலையில்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்ததாக கூறப்பட்ட குழந்தையை தேடினர். அப்போது அந்த வீட்டின் தரையில் ஏதோ […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் காவலர்களை போல நடித்து 12 கோடி கொள்ளையடித்த சம்பவம்…. 8 பேர் அதிரடி கைது…!!

மும்பையில் உணவகம் ஒன்றில் காவலர்களை போல நடித்து 12 கோடியை கொள்ளையடித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புறநகர் பகுதியான விலே பார்லேவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காவலர்கள் போல நுழைந்த நபர்கள் அங்கு சோதனை நடத்த வேண்டும் என்று கூறி 12 கோடியை எடுத்து சென்றனர். பின்னர் உணவக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு வந்த போது நாங்கள் சோதனை செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதை அடுத்து உணவகத்தில் கொள்ளையடிக்க சம்பவம் தெரியவந்தது. […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு… பொங்கல் பதக்கம் அறிவிப்பு..!!

பொங்கல் திருநாளை ஒட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை மற்றும் சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்று தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவல் துறையில் ஆண் பெண் காவல் நிலைய தலைமைக் காவலர் என 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

மனைவியை காப்பாற்றிய காவல்துறையினர்…. கணவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

நபர் ஒருவர்  3 காவல்துறையினரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  பிரான்சில் உள்ள செயின்ட் ஜஸ்ட் என்ற பகுதிக்கு அருகே உள்ள puy-de-dome என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு ராணுவ காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் கூரையின் மேல் அப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்க சென்றுள்ளனர். அப்போது அந்த […]

Categories
உலக செய்திகள்

நீங்களே சொல்லிவிடுங்கள்…. எங்களை அழைக்க வேண்டாம்…. காவல்துறையினர் வேண்டுகோள்….!!

ஜெர்மனி காவல்துறையினர் எல்லாவற்றிக்கும் எங்களை அழைக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெர்மனியின் போலீஸ் யூனியன் தலைவர் Jorg Radek  என்பவர் மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் சட்டத்தை மீறி பொதுமக்கள் யாராவது ஒன்றாகக் கூடினால் நீங்களே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கூறிவிடுங்கள்.உடனேயே காவல்துறையினரை அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொருவரும் இதுபோன்ற காலகட்டங்களில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்றைக்கு சொல்லணும்…! ஒரே நாள் கெடு விதித்த ஐகோர்ட்… மிரளும் தமிழக அரசு …!!

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா ? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள். கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக காவல்துறையினர் தொடர்ச்சியாக எவ்வித சூழலிலும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர். விஐபிகள் வரும் காலங்களில் சாலையோரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர். தமிழத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு காவலர்கள் என்ற விகிதத்திலேயே உள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

போராட மாட்டாங்கன்னு இப்படி பண்றீங்களா ? நீதிபதிகள் சரமாரி கேள்வி …!!

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா ? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள். கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக காவல்துறையினர் தொடர்ச்சியாக எவ்வித சூழலிலும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர். விஐபிகள் வரும் காலங்களில் சாலையோரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர். தமிழத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு காவலர்கள் என்ற விகிதத்திலேயே உள்ளது. மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ் எங்க கூட வா…. 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை…. கதறும் குடும்பத்தினர்….!!

காவல்துறையினர் அழைத்து சென்ற நகைக்கடை உரிமையாளர் பற்றிய எந்த தகவலும் வெளிவராததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் வல்லம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 4 பேர் காரணம் எதுவும் கூறாமல் தங்களை காவல்துறையினர் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆறுமுகத்தின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் தஞ்சாவூர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை – கண்டுகொள்ளாத காவல்துறை…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளாததால் மது விற்பனை செய்யும் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுராந்தகத்தில் தர்மராஜா கோவில் விநாயகர் தெருவில் சரவணன் ஆனந்தி தம்பதியினர் அப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவை தட்டியும் மது கேட்பதாகவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிகளை சிறைபிடித்த காவல்துறையினர்…!!

மதுரை அருகே விவசாயத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட மணலை மாட்டு வண்டியுடன் சிறைப்பிடித்த காவல்துறையினரை விவசாயிகள் குற்றம் சாட்டினர். மதுரை பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளிடத்தில் விவசாயத்திற்காக கிரவெல் மணலை 3 மாட்டு வண்டியில் விவசாயிகள் சிலர் எடுத்து சென்றனர். அப்போது பெரும்குடி காவல்துறை துணை ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் ஆற்று மணல் கடத்தல் என்று குற்றம் சாட்டி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். விவசாயிகள் தாங்கள் விவசாய பணிகளுக்காக கிராவல் மணலை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர் 131 பேருக்கு… “அண்ணா பதக்கம்” வழங்கல்… முதலமைச்சர் அறிவிப்பு…!!

காவல் துறை பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த காரணமாக 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கயிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2பேர், தடய அறிவியல் துறையில் 2 பேர் […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினரை அழைத்த பெண்… விசாரணையில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

பெண் ஒருவர் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்ததால் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவலை அவர்கள் பகிர்ந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் பெஷல் ஸ்டாட்ட் என்ற மண்டலத்தை சேர்ந்த ஒரு பெண் தொலைபேசி வழியாக காவல் துறையினரை அழைத்து தன் குடியிருப்பிற்கு அருகில் நாய் ஒன்று வெகுநேரமாக இருப்பதாகவும், பார்க்க பரிதாபமாக இருப்பதாகவும் கவலை தோய்ந்த குரலில் தெரிவித்துள்ளார். அந்த நாய் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதியுள்ளனர். அதனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு : தப்பு நடக்க இது தான் காரணம்…. OMG போலீசுக்கு ஆதரவாக தமிழக அரசு….!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் போலீசுக்கு ஆதரவாக காவல்துறையினர் பதிலளித்துள்ளனர். சமீபத்தில் தமிழகத்தையே ஒருபுறம் கொரோனா பாதிப்பு சோகத்தில் ஆழ்த்த, மற்றொருபுறம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

மதுக்கடைகளுக்கு பதில் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக போலீசாரை ஈடுபடுத்த வழக்கு… பதில்தர அரசுக்கு கெடு..!!

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலை தடுப்பதற்கு பலகட்டங்களாக ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர், சுகாதார பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்க உத்தரவு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் […]

Categories
கிருஷ்ணகிரி சென்னை திருவாரூர் மாவட்ட செய்திகள்

அவசியமின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை – காவல் துறையினர்

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினரை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உத்தரபிரதேச அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]

Categories

Tech |