வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]
