ஈரானில் ஹிஜாப் கெடுபிடிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாசா என்ற 22 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது ஈரானிய பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்கள் தலைமுடியை கத்தரித்தும் அரசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். […]
