ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கமிஷனர் சுரேஷ்குமார் சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்தும், 3-வது அலையின் தாக்கம் குறித்தும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமையில் பேராசிரியர்கள் […]
