அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித்திரிந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருவதால் அதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் இ-பதிவு சான்றிதழ் இருக்கின்றதா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகளின் போது […]
