காவலர் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டுள்ள சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர் ஒருவர் தன்னுடைய மைத்துனரின் திருமணத்திற்கு செல்வதற்காக மேலதிகாரிகளிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளது பரபரப்பாக நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது. காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த திலீப் குமார் அக்கிர்வார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு […]
