மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள சூரக்குண்டு தெற்குவளவு தெருவில் காளிகருப்பன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் களரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழா மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இன்றி மக்கள் நல்லபடியாக வாழ வேண்டி பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் காவல் தெய்வங்களையும், தங்களது முன்னோர்களையும் வேண்டி ஒரே வாரிசுகளாக இருக்கக்கூடிய தெற்குவளவு 560 குடும்பங்களை சேர்ந்த […]
