வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள புழல் காவாங்கரை திருமலை நகரில் வசித்து வருபவர் முனிசாமி. இவர் மனைவி 45 வயதுடைய சந்திரா. இவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்ற புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் இருக்கின்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் தீ மிதித்துள்ளார். அப்போது திடீரென்று தீக்குண்டத்தில் சந்திரா தவறி விழுந்துட்டார். […]
