நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்த ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சரவணன், வெங்கடேசன் மற்றும் அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்ல் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். […]
