பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பின் போது கால் உடைந்ததை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ரோல், கேமரா, ஆக்சன்… ‘காலை உடைங்க’ என அவர்கள் சொல்ல, நான் அதை உண்மையாகவே செய்துவிட்டேன். இன்னும் 6 வாரங்கள் என்னால் வேலை செய்ய முடியாது. விரைவில் வலிமையாகவும், சிறப்பாகவும் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்
