இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியுள்ள நந்தகோபால் தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். அரசு பேருந்து நடத்துனராக இவர் வழக்கம் போல பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கம்பம் அருகே உள்ள 18-ஆம் கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளது. இதில் தலையில் […]
