கால்வாயில் குளிக்க சென்ற ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் இருளப்பன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குரும்பபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருளப்பன் அப்பகுதியிலுள்ள 58-ம் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இருளப்பன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் […]
