மதுரை அருகே கள்ளந்திரி பாசன வாய்க்காலில் திடீரென ஒரு ஆண் சடலம் மிதந்தபடி வந்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் ஒரு போக விவசாய பாசனத்திற்காக பெரியார் கால்வாய் மற்றும் பிரதான கால்வாயில் இருந்து கடந்த 27-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று இது போல் பலரும் அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது […]
